Sunday, April 23, 2006

Recipe for a south indian tough sweet!!!

பொரிவிளங்கா உருண்டை


தேவையான பொருட்கள்

1. அரிசி (1 பிடி அரிசி)

2. பயத்தம்பருப்பு(1 கால்படி)

3. கடலை பருப்பு (1 கால்படி)

4. கோதுமை மாவு(1/2 கால்படி)

5. தேங்காய் (2 தேங்காய் மூடி)

6. வெல்லம் (1/2 கிலோ)

7. சுக்கு (1 தேர்)

8. ஏலக்காய்(6 )


செய்முறை

1. கடலை பருப்பு, பயத்தம் பருப்பு,கோதுமை மாவு தனித்தனியே வறுக்கவேண்டும்.

2. சுக்கு மற்றும் ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

3. தேங்காயை பல்லு பல்லாக துறுவிக்கொள்ளவும்.

4. வறுத்த பருப்பு மற்றும் கோதுமை மாவு அனைத்தையும் ஒன்றாகச்சேர்த்து அரைக்கவும் (மிக்ஸிலோ அல்லது அருகில் உள்ள மிஷினிலோ)

5. வெல்லத்தை நறுக்கி இலுப்பை சட்டியில் போட்டு ஒரு கரண்டி நீரில் கரைத்துக்கொள்ளவும்.

6. கரைத்த வெல்லத்தில் துறுவிய தேங்காயை போடவும்.

7. வெல்லமும் தேங்காயும் கலந்த நீரை கொதிக்க வைக்கவும்.

8. பொடித்த சுக்கு மற்றும் ஏலக்காயையும் அரைத்த மாவையும் ஒன்றாக சேர்க்கவும்.

9. இவ்விதம் கலந்த மாவை கல்லுப்பாகில் பிடித்து உருண்டைகள் செய்யவும்.

10. சுவையான, பற்களை சோதிக்கும்(!!) பொருள் விளங்கா உருண்டைகள் தயார்.


சுவை


1. கார்த்திகை தீபப்பண்டிகை நேரங்களில் பல குடும்பங்களில் செய்யும் உணவுப்பொருட்களில் ஒன்று இந்த "பொறி விளங்கா உருண்டை".

2. இதில் புரதச்சத்தும், வெல்லம் மூலமாக இரும்புச்சத்தும் நிறைந்த, அதே சமயம் இனிப்புச்சுவையும் உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

3. சுக்கு கலந்துள்ளதால் செறிமானமும் சீறிய வகையில் இருக்கும் என்பதால் வ்யிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் தயக்கமின்றி உண்ணலாம்.

4. பல் உள்ள அனைவரும் சுவைத்து மகிழ சிறந்த உணவுப்பண்டம் இந்த "பொறி விளங்கா உருண்டை".

என் மனைவியின் பாட்டி திருமதி. ருக்மணி அவர்கள் சொல்ல நான் எழுதிய குறிப்பு இது.

1 Comments:

Blogger megha said...

Well, I would appreciate it if you posted the recepie in English..I really couldn't fathom all those Jalebis...(no offense to the language called Tamil)

5:16 PM  

Post a Comment

<< Home